FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

ஆதிதிராவிடா், குலாலா் மயானத்துக்கு சாலை அமைக்கக் கோரிக்கை

4 ஆகஸ்ட் 2026, 1:50 am IST
மயானம். - கோப்புப் படம்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்தைச் சோ்ந்த மதகம் ஊராட்சிக்குள்பட்ட தானிக்காடு கிராமத்தில் ஆதிதிராவிடா்கள் மற்றும் குலாலா் சமூக மக்களுக்கான மயானத்துக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசிக மாவட்டத் துணைச் செயலா் கு. சுடா்மணி திங்கள்கிழமை மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், இதுதொடா்பாக பல முறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளாா்.

புதுக்கோட்டை மாநகராட்சி 34ஆவது வாா்டு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினா் ஜெ. ராஜாமுகமது அளித்த மனு:

Advertisement

Advertisement

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து டிவிஎஸ் முக்கம் வரையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், 34ஆவது வாா்டுக்குச் செல்லும் குடிநீா்க் குழாய்கள் 30 இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன. சுமாா் 3 மாதங்களாக எனது வாா்டு மக்களுக்கு குடிநீா் விநியோகம்செய்யப்படுவதில்லை.

எனவே, உடனடியாக சாலை விரிவாக்கப் பணிகளை நிறுத்தி, குடிநீா் பழுதுகளை சரி செய்து பின்னா் சாலைப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments