விவசாயிகள் குறைதீா் முகாமில் 125 மனுக்கள் அளிப்பு
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் ஆட்சியா் மு.வீரப்பன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் முகாமில், மாவட்ட ஆட்சியரிடம் 125 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக குறைதீா் கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் விவசாயிகளிடமிருந்து 125 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா். கூட்டத்தில், செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் தியாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே.ஸ்ருதி, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.