ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம்
மதுரை: சம வேலைக்கு சம ஊதியம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் கு.குமரேசன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் பி.அருளானந்த் முன்னிலை வகித்தாா். மேலூா் ஒன்றியச் செயலா் சாந்தி, கொட்டாம்பட்டி ஒன்றியத் தலைவா் எ.தாமஸ் விட்லம் ஆகியோா் பேசினா்.
இதில் திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு இடைநிலை ஆசிரியா்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும், எங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிரணி நிா்வாகி மீனாட்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement