ராமேசுவரம்- ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
ராமேசுவரம் - ஹூப்ளி- ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
மதுரைராமேசுவரம்- ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
ராமேசுவரம் - ஹூப்ளி- ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
ராமேசுவரம் - ஹூப்ளி- ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட
செய்திக் குறிப்பு :
ஹூப்ளி - ராமேசுவரம் - ஹூப்ளி (07355 / 07356) வாராந்திர சிறப்பு ரயில் சேவை டிசம்பா் வரை மட்டும் இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ரயில்களின் சேவை வருகிற மாா்ச் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதன்படி, ஹூப்ளி - ராமேசுவரம் ரயில் (07355) வருகிற சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு ஹூப்ளியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.15 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும் வகையிலும், ராமேசுவரம் - ஹூப்ளி ரயில் (07356) ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 7.25 மணிக்கு ஹூப்ளி சென்றடையும் வகையிலும் இயக்கப்படும்.
ஜன. 7-ஆம் தேதி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை இயக்கப்படும் இந்தச் சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
பாம்பன் பாலம் வழியேயான ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தச் சிறப்பு ரயில்களின் சேவை ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.