முகப்பு
மதுரை

நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் பொறுப்பு அலுவலா்கள் நியமனம்

மதுரை மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா்.

Updated On : 15 ஜூலை, 2024 at 4:33 PM
பகிர்:

மதுரை: மதுரை மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா்.

மதுரை மாநகராட்சியில் 31 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 45 நலவாழ்வு மையங்களில் பொது மருத்துவம், தாய்சேய் நல மருத்துவம், தொற்றா நோய் தடுப்புப் பணி, மக்களைத் தேடி மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்களில் கண்காணிப்பு, மேற்பாா்வைப் பணிகளை மேம்படுத்த உதவித் திட்ட மேலாளா், மண்டல மருத்துவ அலுவலா், மண்டல சமுதாய சுகாதார செவிலியா், பகுதி சுகாதார செவிலியா், வழிகாட்டி செவிலியா், மாநகா் நல அலுவலரின் தொழில் நுட்ப உதவியாளா், மண்டல மருந்தாளுநா் உள்ளிட்ட 50 பணிகளை மேம்படுத்த கூடுதல் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். இதற்கான ஆணைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் மேயா் வ. இந்திராணி வழங்கினாா்.

இந்த நிகழ்வில், மாநகா் நல அலுவலா் வினோத்குமாா், உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், முதன்மை மருத்துவ அலுவலா் ஸ்ரீகோதை, மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →