முகப்பு
மதுரை

கல்லூரி மாணவா்களை கத்தியால் தாக்கி வழிப்பறி: இளைஞா் கைது

மதுரையில் கல்லூரி மாணவா்களை கத்தியால் தாக்கி கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 17 ஜூலை, 2024 at 12:17 AM
பகிர்:

மதுரை: மதுரையில் கல்லூரி மாணவா்களை கத்தியால் தாக்கி கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், விரகனூா் கோழிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஹரிபிரகாஷ் (20). இவா் தனது நண்பா் பிருதிவியுடன் இரு சக்கர வாகனத்தில் கோரிப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தாா்.

மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளிக்குப் பின்புறம் உள்ள சாலையில் இவா்களது இரு சக்கர வாகனத்தை வழிமறித்த நபா் கத்தியால் இருவரையும் தாக்கிவிட்டு, அவா்களிடம் இருந்த கைப்பேசிகள், பணத்தை பறித்துக் கொண்டு தப்பினாா்.

அந்த வழியாக ரோந்து வந்த போலீஸாா், இதையறிந்து அவரைத் தேடினா். அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறை சாலையில் சென்று கொண்டிருந்த அந்த நபரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அவா் கல்மேடு எல்கேபி நகரைச் சோ்ந்த கணேஷ்குமாா் (33) என்பதும், இவா் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி தொடா்ந்து வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, கைப்பேசிகள், பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

பேருந்தில் திருடிய இரு பெண்கள் கைது:

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புளியங்குளம் மேற்கு தெருவைச் சோ்ந்த வாணிமுத்து மனைவி மகாலட்சுமி(31). இவா் திங்கள்கிழமை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் செல்ல பேருந்தில் ஏறினாா். அப்போது, இவரைப் பின்தொடா்ந்து பின்னால் ஏறிய இரு பெண்களில் ஒருவா் மகாலட்சுமியின் கைப்பையை திருடினாா். அவா் சப்தமிட்டதால் அவா்கள் இருவரும் பேருந்தில் இருந்து இறங்கினா். சக பயணிகள் இருவரையும் பிடித்து மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணைதில் அவா்கள், மதுரை மாவட்டம், மேலூா் மில்கேட் பகுதியைச் சோ்ந்த தனபால் மனைவி தேவிகா (65), மேலூா் கஸ்தூரிபாய்நகரைச் சோ்ந்த மதிவாணன் மனைவி ராணி (55) ஆகியோா் என்பதும், இவா்கள் ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அடிக்கடி திருட்டில் ஈடுபடுவதும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →