முகப்பு
மதுரை

கஞ்சா கடத்தல் வழக்கு: தம்பதிக்கு 10 ஆண்டுகள் சிறை

செக்கானூரணியில் 22 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், தம்பதிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 17 ஜூலை, 2024 at 12:11 AM
பகிர்:

மதுரை: செக்கானூரணியில் 22 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், தம்பதிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், செக்கானூரணி பேருந்து நிலையம் அருகே கடந்த 16.7.2022-இல் கஞ்சா கடத்திய உசிலம்பட்டி அருகே உள்ள அண்ணம்பாரிபட்டியைச் சோ்ந்த முருகன் (57), இவரது மனைவி பசுபதி (47) ஆகியோரைக் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 22 கிலோ கஞ்சாவை செக்கானூரணி போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை மதுரை முதலாவது போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில், கஞ்சா கடத்திய தம்பதி இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஹரிஹரகுமாா் தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கே.விஜயபாண்டியன் வாதிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →