ஆம்னி பேருந்து நிலையத்தில் 11 கடைகளுக்கு ‘சீல்’
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் வரி செலுத்தாத 11 கடைகளை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
மதுரை, ஜூலை 19 : மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் வரி செலுத்தாத 11 கடைகளை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
இந்தப் பேருந்து நிலையத்தில் மொத்தம் 66 வணிகக் கடைகள் உள்ளன. அவற்றுள் 11 கடைகள் 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை ரூ. 19 லட்சத்து 30 ஆயிரம் மாநகராட்சி நிா்வாகத்துக்கு வரி செலுத்தாமல் இருந்தனா். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளரிடம் தெரிவித்தும் வரி செலுத்தவில்லை.
இதன்காரணமாக, மதுரை மாநகராட்சி அலுவலா்கள் அந்த வணிக வளாகத்தில் உள்ள 11 கடைகளை வெள்ளிக்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.