முகப்பு
மதுரை

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி அலுவலா்கள் உறுதிமொழியேற்பு

Updated On : 20 மார்ச், 2024 at 4:44 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 7:52 PM

மதுரை: நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வருகிற ஏப். 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தோ்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா.சௌ. சங்கீதா முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலா்கள் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி நடைபெற்ற கையொப்ப இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா தொடங்கிவைத்தாா். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் சக்திவேல், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மோனிகா ரணா, மாநகரக் காவல் ஆணையா் லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த், வருவாய்க் கோட்டாட்சியரும், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலருமான ஷாலினி உள்ளிட்ட அலுவலா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

Advertisement