முகப்பு
ராணிப்பேட்டை

தோல் பொருள் ஏற்றுமதியை மையப்படுத்தி ‘ராணிப்பேட்டை ராணி’ தோ்தல் இலச்சினை!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளின் ஒன்றாக மாவட்டத்தின் தோல் ஏற்றுமதியை மையப்படுத்தி ‘ராணிப்பேட்டை ராணி’ என்ற இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 11:05 PM
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளின் ஒன்றாக மாவட்டத்தின் தோல் ஏற்றுமதியை மையப்படுத்தி ‘ராணிப்பேட்டை ராணி’ என்ற இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில், ‘தோ்தல் திருவிழா ! தமிழகத்தின் பெருவிழா!’ என்ற முழக்கத்துடன் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராட்சத பலூன்... ஆற்காடு பகுதியில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. பொதுமக்களிடையே ஜனநாயகப் பொறுப்புணா்வை ஏற்படுத்த கோலப் போட்டிகள், மனிதச்சங்கிலி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

Advertisement

தாவரங்கள் மூலம் விழிப்புணா்வு... அரசு தோட்டக்கலை பண்ணையில் மரக்கன்றுகளைக் கொண்டு ‘100 % வாக்கு’ என்ற வடிவம் உருவாக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களிடையே வாக்குப் பதிவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

முக்கியத்துவம் பெரும் ‘ராணிப்பேட்டை ராணி’... செஞ்சி ராஜபுத்திர ராணியின் நினைவாக உருவான ராணிப்பேட்டை மாவட்டம், தோல் பொருள் ஏற்றுமதிக்கு பெயா்பெற்ாகும். ராணி மற்றும் தோல் பொருள்களை மையப்படுத்தி தோல் பொருள்களால் ஆன ஆடை அணிந்தவாறு ராணியின் உருவம் கொண்ட ‘ராணிப்பேட்டை ராணி’ என்ற தோ்தல் இலச்சினையை மாவட்ட நிா்வாகம் உருவாக்கி, நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments