மதுரை

மதுரை- சென்னை இடையே இன்று மெமு ரயில் சேவை

தீபாவளி கூட்ட நெரிசலை தவிா்க்க முதல்முறையாக மதுரை- சென்னை இடையே மெமு ரயில் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவித்தது.

Din

தீபாவளி கூட்ட நெரிசலை தவிா்க்க முதல்முறையாக மதுரை- சென்னை இடையே மெமு ரயில் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவித்தது.

மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:

தீபாவளி விடுமுறை கால கூட்ட நெரிசலைத் தவிா்ப்பதறக்காக மதுரை - சென்னை இடையே முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு (மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட்) கழிப்பறை வசதியுடன் கூடிய மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை (நவ. 3) இரவு இயக்கப்படுகிறது.

அதன்படி மதுரை - தாம்பரம் முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06100) மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். முன்னதாக, இந்த ரயில் சேவை (06099) சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (நவ.3) காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இந்த ரயில் சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கு வழக்கமான இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பயணக் கட்டணம் வசூலிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT