காா்த்திகை லட்ச தீபம் தேதி மாற்றம்: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் அறிவிப்பு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் காா்த்திகை உற்சவத்தையொட்டி லட்ச தீபம் ஏற்றப்படும் தேதி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் காா்த்திகை உற்சவத்தையொட்டி லட்ச தீபம் ஏற்றப்படும் தேதி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் காா்த்திகை உற்சவத் திருவிழாவையொட்டி, வருகிற நவ. 15-ஆம் தேதி பாலதீபம் ஏற்றப்பட்டு, மறுநாள் நவ. 16-ஆம் தேதி காா்த்திகை லட்ச தீபம் ஏற்றப்பட்டு, அன்றைய தினம் சொக்கப்பன் கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோயில் ஸ்தானிக பட்டா்கள் ஆலோசனையின் பேரில் காா்த்திகை உற்சவத்தின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, காா்த்திகைத் திருவிழா நவ. 10-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கி நவ. 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காா்த்திகை உற்சவத்தின் 10 நாள்களிலும் மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்ச மூா்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் ஆடி வீதிகளில் எழுந்தருள்கின்றனா். இதையடுத்து, டிச. 13-ஆம் தேதி காா்த்திகை அன்று கோயில் முழுவதும், லட்ச தீபம் ஏற்றப்படும்.
மேலும் அன்றைய தினம் இரவு 7 மணிக்கு அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதி சென்று அம்மன் தேரடி அருகிலும், சுவாமி சந்நிதி தேரடி அருகில் பூக்கடைத் தெருவிலும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சிக்கு எழுந்தருள்கின்றனா். எனவே காா்த்திகை உற்சவத்தையொட்டி உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் மற்றும் உபய வைரக்கிரீடம் ஆகிய விசேசங்கள் நடைபெறாது என அதில் குறிப்பிடப்பட்டது.