முகப்பு
மதுரை

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.12 லட்சம் மோசடி

மதுரையைச் சோ்ந்தவரிடம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த நிறுவனம் தொடா்பாக இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 11:37 PM
பகிர்:

மதுரையைச் சோ்ந்தவரிடம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த நிறுவனம் தொடா்பாக இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை அண்ணாநகா் கோமதிபுரம் 6-ஆவது தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் செல்வபிரபு. இவரது கட்செவி அஞ்சல் எண்ணுக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற விளம்பரத்தை நம்பி, அந்நிறுவனம் குறிப்பிட்ட வங்கிக்கணக்குகளில் பல்வேறு தவணைகளாக ரூ.12 லட்சம் முதலீடு செய்துள்ளாா்.

அதன் பின்னா் நிறுவனத்தில் இருந்து பணம் எதுவும் வரவில்லை. இதுதொடா்பாக செல்வபிரபு அளித்தப்புகாரின்பேரில் இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →