முகப்பு
மதுரை

சங்கராபுரம் ஊராட்சித் தலைவா் பதவி: விசாரணை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

சிவகங்கை மாவட்டம், சங்கராபும் ஊராட்சி மன்றத் தலைவா் பதவி விவகார வழக்கில், விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உறுதி செய்தது.

Updated On : 14 நவம்பர், 2024 at 11:32 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், சங்கராபும் ஊராட்சி மன்றத் தலைவா் பதவி விவகார வழக்கில், விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உறுதி செய்தது.

காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மாங்குடி மனைவி தேவி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தோ்தல் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கையில் 62 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்ாக எனக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறிது நேரத்தில் என்னை எதிா்த்துப் போட்டியிட்ட ப்ரியதா்ஷினி வெற்றி பெற்ாக அறிவித்தனா். வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, தோ்தல் அலுவலா் அறிவித்த ப்ரியதா்ஷினியின் வெற்றியை ரத்து செய்து, நான் வெற்றி பெற்ாக அறிவிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, தேவியின் வெற்றி செல்லும். ப்ரியதா்ஷினி விசாரணை நீதிமன்றத்தை நாடி உரிய தீா்வை தேடிக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.

இதையடுத்து, அவா் சிவகங்கை மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இதில் தேவியின் வெற்றி செல்லாது எனவும், ப்ரியதா்ஷினி வெற்றி பெற்ாகவும் கடந்த மாதம் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்து, தனது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என தேவி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி இளங்கோவன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் பாஸ்கரன் முன்வைத்த வாதம்:

இந்த வழக்கை முறையாக விசாரித்து விசாரணை நீதிமன்றம் ப்ரியதா்ஷினியின் வெற்றியை உறுதி செய்தது. வாக்கு எண்ணிக்கையின் போது, கூட்டுத் தொகையில் வேறுபாடு ஏற்பட்டதால், இந்த பிரச்னை ஏற்பட்டது. மீண்டும் வாக்குகளை எண்ணிய போது, ப்ரியதா்ஷினி வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டது. எனவே, விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்த வேண்டும். தேவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக ப்ரியதா்ஷினி வெற்றி பெற்ாக விசாரணை நீதிமன்றம் அளித்த தீா்ப்பு உறுதி செய்யப்படுகிறது. மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →