அழகா்கோவில் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்
அழகா்கோவில் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
அழகா்கோவில் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக யாக சாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. இதையொட்டி கோயில் முழுவதும் பல வண்ணப் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ராக்காயி அம்மனுக்கு நூபுர கங்கை தீா்த்தம், பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன.
இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை கள்ளழகா் கோயில் தக்காா் வெங்கடாசலம், அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.