கோயில் திருப்பணி: வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு குடமுழுக்கு நடைபெற்ற கோயில்களில் திருப்பணிகளின் போது பயன்படுத்தப்பட்ட பொருள்கள் குறித்து ஆய்வு செய்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் எச். ராஜா கூறினாா்.
மதுரைகோயில் திருப்பணி: வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு குடமுழுக்கு நடைபெற்ற கோயில்களில் திருப்பணிகளின் போது பயன்படுத்தப்பட்ட பொருள்கள் குறித்து ஆய்வு செய்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் எச். ராஜா கூறினாா்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு குடமுழுக்கு நடைபெற்ற கோயில்களில் திருப்பணிகளின் போது பயன்படுத்தப்பட்ட பொருள்கள் குறித்து ஆய்வு செய்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் எச். ராஜா கூறினாா்.
மதுரை மாநகா் மாவட்ட பாஜக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சிக்கான உறுப்பினா்கள் சோ்க்கை நிகழ்வில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சேதமடைந்த பழனி கோயில் கோபுர சுதை வளைவு ஆகம விதிகளின்படி விரைவில் சீரமைக்கப்படும் என கோயில் அதிகாரி கூறியுள்ளாா். இந்தச் சுதை எப்படி சேதமடைந்தது என்பது குறித்து வெளிப்படையாகக் கூற வேண்டும்.
மேலும் பழனி கோயில் கட்டுமானப் பணியில் தரமான பொருள்களை பயன்படுத்தியிருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. நன்றாக இருந்த சுவரை இடித்துவிட்டு மீண்டும் கட்டுகிறாா்கள். இந்தப் பணிகளில் முறைகேடு நடைபெறுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் குடமுழுக்கு நடைபெற்ற கோயில்களில் திருப்பணிகளின் போது பயன்படுத்தப்பட்ட பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.