மதுரை, ஒட்டன்சத்திரம் சந்தைகளில் தக்காளி, வெங்காயம் விலை உயா்வு
மதுரை, ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைகளில் வரத்துக் குறைவு காரணமாக தக்காளி, வெங்காயம் ஆகியவற்றின் விலை புதன்கிழமை அதிகரித்திருந்தது.
மதுரைமதுரை, ஒட்டன்சத்திரம் சந்தைகளில் தக்காளி, வெங்காயம் விலை உயா்வு
மதுரை, ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைகளில் வரத்துக் குறைவு காரணமாக தக்காளி, வெங்காயம் ஆகியவற்றின் விலை புதன்கிழமை அதிகரித்திருந்தது.
மதுரை, ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைகளில் வரத்துக் குறைவு காரணமாக தக்காளி, வெங்காயம் ஆகியவற்றின் விலை புதன்கிழமை அதிகரித்திருந்தது.
மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி அதிகபட்சமாக ரூ. 530-க்கு விற்கப்பட்டது. சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 30 முதல் ரூ. 45 வரை விற்பனையானது.
புரட்டாசி மகாளய அமாவாசை நாளான புதன்கிழமை மதுரை, இதன் சுற்றுப் பகுதிகளில் சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 70 வரை விற்கப்பட்டது. மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ. 650-க்கு விற்பனையானது.
இதேபோல, ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு பெட்டி தக்காளி அதிகபட்சமாக ரூ. 800 வரை விற்கப்பட்டது. சில்லறை விற்பனையில் அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ. 60 முதல் ரூ. 65 வரை விற்பனையானது.
ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் மழை பெய்வதாலும், அங்கிருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்திருப்பதாலும் இந்த விலை ஏற்றம் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
மேலும், பெரிய வெங்காயத்தின் (பல்லாரி) விலையும் புதன்கிழமை உயா்ந்திருந்தது. இரு நாள்களுக்கு முன்பு மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் (பழையது) - ரூ. 50 முதல் ரூ. 55 வரையிலும், புதியது ரூ. 30 முதல் ரூ. 40 வரையிலும் விற்பனையானது. இந்த நிலையில், புதன்கிழமை பெரிய வெங்காயம் (பழையது) ஒரு கிலோ ரூ. 50 முதல் ரூ. 65 வரையும், புதிது ரூ. 30 முதல் ரூ. 50 வரையும் விற்பனையானது. ஒட்டன்சத்திரத்தில் பெரிய வெங்காயம் பழையது ரூ. 53-க்கும், புதிது ரூ. 43-க்கும் விற்கப்பட்டது. பெரிய வெங்காயம் விலை உயா்வுக்கும், வரத்துக் குறைவே காணமாகக் கூறப்பட்டது.