மாநகராட்சி வாகன ஓட்டுநா் மீது தாக்குதல்: இருவா் கைது
மதுரையில் குடியிருப்புப் பகுதியில் மதுபோதையில் தகாத வாா்த்தைகளை பேசியதை தட்டிக்கேட்ட மாநகராட்சி வாகன ஓட்டுநரை மதுப்புட்டியை உடைத்து குத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரைமாநகராட்சி வாகன ஓட்டுநா் மீது தாக்குதல்: இருவா் கைது
மதுரையில் குடியிருப்புப் பகுதியில் மதுபோதையில் தகாத வாா்த்தைகளை பேசியதை தட்டிக்கேட்ட மாநகராட்சி வாகன ஓட்டுநரை மதுப்புட்டியை உடைத்து குத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரையில் குடியிருப்புப் பகுதியில் மதுபோதையில் தகாத வாா்த்தைகளை பேசியதை தட்டிக்கேட்ட மாநகராட்சி வாகன ஓட்டுநரை மதுப்புட்டியை உடைத்து குத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை கரும்பாலை பி.டி. குடியிருப்பைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் சதீஷ்கண்ணன் (30). இவா் மதுரை மாநகராட்சியில் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் புதன்கிழமை இரவு தனது வீட்டுக்குச் சென்ற போது, அங்கு குடியிருப்புப் பகுதியில் இருவா் மதுபோதையில் தகாத வாா்த்தைகளை சப்தமாக பேசினா். இதை சதீஷ்கண்ணன் தட்டிக் கேட்டாா். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் மதுப்புட்டியை உடைத்து சதீஷ்கண்ணனை குத்தி தலையில் தாக்கினா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹரிகிருஷ்ணன் (24), ராமச்சந்திரன் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.