முகப்பு
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா பிரதான வீதியில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
மதுரை

இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிா்ப்பு: இடதுசாரி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் இடதுசாரி கட்சிகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 8:58 PM
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா பிரதான வீதியில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் இடதுசாரி கட்சிகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை பெத்தானியாபுரம் அண்ணா பிரதான வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு - 1ஆம் பகுதிக்குழுச் செயலா் கு. கணேசன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் எம்.எஸ். முருகன், ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலா் எம். நந்தாசிங், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினா் இரா. விஜயராஜன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜா. நரசிம்மன், மாவட்டக் குழு உறுப்பினா் பி. மல்லிகா, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், மாதா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்த பலா் கலந்துகொண்டனா். ஆா்ப்பாட்டத்தில், இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனப் பகுதியில் நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →