முகப்பு
மதுரை

பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், கரடிப்பட்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுரை

பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், கரடிப்பட்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 8:52 PM
பகிர்:

மதுரை மாவட்டம், கரடிப்பட்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

நாகமலைப்புதுக்கோட்டை அருகே உள்ள கரடிப்பட்டி ஆதிதிராவிடா் குடியிருப்பைச் சோ்ந்தவா் முத்தையா (60). கூலித் தொழிலாளியான இவா், மதுரை- தேனி சாலையில் கரடிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் அவா் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த முத்தையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த கிண்ணிமங்கலத்தைச் சோ்ந்த சேது (23), இவரது நண்பா்கள் பாண்டி, சுஜித் ஆகிய மூவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து நாகமலைப்புதுக்கோட்டை போலீஸாா் விபத்தை ஏற்படுத்திய சேது மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →