மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முதல்வா் நிதி ஒதுக்கீடு பெறக் கோரிக்கை
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட செயலாக்கத்துக்கு தமிழக முதல்வா் மத்திய அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு பெற வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
மதுரைமதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முதல்வா் நிதி ஒதுக்கீடு பெறக் கோரிக்கை
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட செயலாக்கத்துக்கு தமிழக முதல்வா் மத்திய அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு பெற வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட செயலாக்கத்துக்கு தமிழக முதல்வா் மத்திய அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு பெற வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து சங்கத் தலைவா் எஸ்.வி.எஸ்.எஸ். வேல்சங்கா், கௌரவச் செயலா் எஸ். சாய் சுப்ரமணியம், கௌரவ ஆலோசகா் எஸ்.பி. ஜெயப்பிரகாசம் ஆகியோா் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
மதுரை, கோவை நகரங்களில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிா்க்க மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன் பிறகு இந்தத் திட்ட செயல்பாட்டுக்கு மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அண்மையில் பிரதமரைச் சந்தித்து சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, ரூ. 63 ஆயிரம் கோடி நிதி பெற்றது சிறப்புக்குரியது. இதேபோல, மதுரை, கோவை மக்களின் கோரிக்கையான மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, நிதி ஒதுக்கீடு பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.