முகப்பு
மதுரை

ரயில் பாதை மின் தடம் பராமரிப்புப் பணி: திருச்செந்தூா், பாலக்காடு ரயில் போக்குவரத்தில் மாற்றம்

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் பாதை மின் தடம் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், ரயில்கள் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Updated On : 10 அக்டோபர், 2024 at 9:57 PM
பகிர்:

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் பாதை மின் தடம் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், ரயில்கள் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு :

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் பாதை மின் தடத்தை மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதனால், திருநெல்வேலி- திருச்செந்தூா், பாலக்காடு ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, திருச்செந்தூரிலிருந்து பிற்பகல் 4.25 மணிக்கு புறப்படும் திருச்செந்தூா்-திருநெல்வேலி முன்பதிவில்லாத ரயில் (06676) வருகிற 15-ஆம் தேதி முதல் நவ. 22-ஆம் தேதி வரை, திங்கள்கிழமைகள், தீபாவளி பண்டிகை நாள் (அக். 31) தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

பாலக்காடு-திருச்செந்தூா் முன்பதிவில்லாத ரயில் (16731) வருகிற 15-ஆம் தேதி முதல் நவ. 22-ஆம் தேதி வரை, திங்கள்கிழமைகள், தீபாவளி நாள் (அக்.31) தவிர மற்ற நாள்களில் தாழையூத்து - திருச்செந்தூா் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

திருச்செந்தூா்-பாலக்காடு முன்பதிவில்லாத ரயில் (16732) வருகிற15-ஆம் தேதி முதல் நவ. 22-ஆம் தேதி வரை, திங்கள்கிழமைகள், தீபாவளி நாள் (அக். 31) தவிர மற்ற நாள்களில் திருச்செந்தூரிலிருந்து நண்பகல் 12.20 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக பிற்பகல் 1.45 மணிக்கு 85 நிமிஷங்கள் காலதாமதமாகப் புறப்படும்.

அக். 15, நவ. 17, 20, 21, 22 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி- செங்கோட்டை முன்பதிவு இல்லாத ரயில் (06687) திருநெல்வேலியிலிருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக பிற்பகல் 2.40 மணிக்கு 50 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →