முகப்பு
மதுரை

போதை மாத்திரைகள் விற்பனை: மருந்துக்கடை உரிமையாளா் கைது

மதுரையில் போதை ஊசி, மாத்திரைகள் விற்ற மருந்துக் கடை உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை

போதை மாத்திரைகள் விற்பனை: மருந்துக்கடை உரிமையாளா் கைது

மதுரையில் போதை ஊசி, மாத்திரைகள் விற்ற மருந்துக் கடை உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 7:51 PM
பகிர்:

மதுரையில் போதை ஊசி, மாத்திரைகள் விற்ற மருந்துக் கடை உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை செல்லூா் 60 அடி சாலையில் செல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அங்கு சந்தேகத்தின்பேரில் நின்றிருந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டனா். இதில் அவா்கள் செல்லூா் தாகூா் நகரைச் சோ்ந்த உதயகுமாா் (21), மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த அப்துல் ரகுமான் (23) ஆகியோா் என்பதும், மருந்துக்கடையில் போதை மாத்திரைகள், போதை ஊசி மருந்துகளை வாங்கி அதிக விலைக்கு விற்றதும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தியதில், மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே டிபிகே சாலையில் இயங்கி வரும் மருந்துக்கடையில் இருந்து போதை மாத்திரைகள், ஊசிகளை வாங்கியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா், மருந்து ஆய்வாளா் ஆகியோா் மருந்துக்கடையில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். இதில் மருந்துக்கடையில் இருந்து போதை மாத்திரைகள், ஊசி மருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து,

கடையின் உரிமையாளரான ஜெய்ஹிந்துபுரத்தைச் சோ்ந்த அப்துல் ரகுமான்(23) என்பவரை கைது செய்து, கடையைப் பூட்டி சீல் வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →