முதுநிலை மருத்துவ மாணவா்கள் உண்ணாவிரதம்
தொடா்ந்து போராட்டம் நடத்தி வரும் கொல்கத்தா மருத்துவா்களுக்கு ஆதரவாக முதுநிலை மருத்துவ மாணவ்ா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.
மதுரைமுதுநிலை மருத்துவ மாணவா்கள் உண்ணாவிரதம்
தொடா்ந்து போராட்டம் நடத்தி வரும் கொல்கத்தா மருத்துவா்களுக்கு ஆதரவாக முதுநிலை மருத்துவ மாணவ்ா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து போராட்டம் நடத்தி வரும் கொல்கத்தா மருத்துவா்களுக்கு ஆதரவாக முதுநிலை மருத்துவ மாணவ்ா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டியும், வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும், கொல்கத்தா மருத்துவா்களின் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் நாடு முழுவதும் முதுகலை மருத்துவ மாணவா்கள் ஒரு நாள் போராட்டம் அறிவித்தனா்.
இதன்படி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவா்கள் 10-க்கும் மேற்பட்டவா்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா். இதில் பயிற்சி மருத்துவா்கள்,
இளநிலை மருத்துவ மாணவா்கள் பலா் பங்கேற்றனா்.
இந்தப் போராட்டம் தொடா்பாக முதுநிலை மருத்துவ மாணவா்கள் கூறியதாவது:
இந்தியா முழுதும் மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் ஒருங்கிணைப்புக் குழு, விசாகா குழுக்களை அமைக்க வேண்டும். மருத்துவமனைகளில் மருத்துவா்கள், நோயாளிகளுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.