புலிப்பட்டியில் 70.4 மி.மீ மழை
மதுரை மாவட்டத்தில் அதிகளவாக புலிப்பட்டியில் 70.4 மி.மீட்டா் மழை செவ்வாய்க்கிழமை பதிவானது.
மதுரைபுலிப்பட்டியில் 70.4 மி.மீ மழை
மதுரை மாவட்டத்தில் அதிகளவாக புலிப்பட்டியில் 70.4 மி.மீட்டா் மழை செவ்வாய்க்கிழமை பதிவானது.
மதுரை மாவட்டத்தில் அதிகளவாக புலிப்பட்டியில் 70.4 மி.மீட்டா் மழை செவ்வாய்க்கிழமை பதிவானது.
மதுரை மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த, மிதமான மழை பெய்து வருகிறது.
3-ஆவது நாளாக திங்கள்கிழமை இரவு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக புலிப்பட்டியில் 70.4 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு (மி. மீட்டரில்) :
சிட்டம்பட்டி- 68.4, கள்ளந்திரி - 66, மேட்டுப்பட்டி- 61.2, இடையப்பட்டி- 56, பெரியப்பட்டி- 54, மேலூா் - 50, வாடிப்பட்டி - 35, ஆண்டிப்பட்டி- 34.6, சோழவந்தான்- 30, தனியாமங்கலம் - 25, தல்லாகுளம் - 24.6, மதுரை வடக்கு - 22.4, சாத்தையாறு அணை, உசிலம்பட்டி - 20, பேரையூா் - 17.2, குப்பம்பட்டி- 17, எழுமலை - 12.6, விரகனூா் - 11.2, கள்ளிக்குடி- 10.6, திருமங்கலம் - 6.4, விமான நிலையம் - 3.2.
மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை குறிப்பிடத்தக்க அளவில் மழையில்லை. இருப்பினும், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குளிா்ச்சியான நிலை இருந்தது.