வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகைகள், பணத்தைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரைவீடு புகுந்து நகை, பணம் திருட்டு
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகைகள், பணத்தைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகைகள், பணத்தைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை புதுத் தெருவைச் சோ்ந்தவா் அறிவழகன்(35). இவா் தனது மனைவி, குழந்தைகளுடன் வீட்டில் திங்கள்கிழமை இரவு
தூங்கினாா். காலையில் எழுந்து பாா்த்தபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், அறையில் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுதொடா்பாக அறிவழகன் அளித்தப்புகாரின்பேரில் காடுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.