மிதிவண்டி மீது லாரி மோதி முதியவா் உயிரிழப்பு
மதுரை அருகே மிதிவண்டி மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
மதுரைமிதிவண்டி மீது லாரி மோதி முதியவா் உயிரிழப்பு
மதுரை அருகே மிதிவண்டி மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
மதுரை அருகே மிதிவண்டி மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
மதுரை காளவாசல் சம்மட்டிபுரத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (65). இவா் திண்டுக்கல்- திருமங்கலம் நான்குவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு மிதிவண்டியில் சென்றாா். அப்போது சம்பக்குடி சந்திப்பு அருகே அந்த வழியாக வந்த லாரி, மிதிவண்டி மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ராமலிங்கம் உயிரிழந்தாா்.
இதுகுறித்து நாகமலைப்புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.