முகப்பு
மதுரை

அக்னி தீா்த்தத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்கக் கோரி வழக்கு: ராமேசுவரம் நகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்கக் கோரிய வழக்கில் நகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 23 அக்டோபர், 2024 at 11:51 PM
பகிர்:

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்கக் கோரிய வழக்கில் நகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்த யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு:

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா். இந்தக் கோயில் பகுதியிலிருந்து அக்னி தீா்த்தம் செல்வதற்கான சாலை, பிற சாலைகள் மோசமாக இருப்பதால் பக்தா்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பதால், இங்கு புனித நீராட வரும் பக்தா்கள் சிரமப்படுகின்றனா். இதை தடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

அக்னி தீா்த்தத்திலிருந்து 200 மீட்டா் தொலைவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீா் மீண்டும் கடலில் கலக்கப்படுகிா? சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும், கழிவுகளும் என்ன செய்யப்படுகின்றன என்பது குறித்து நகராட்சி ஆணையா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற நவம்பா் 18- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →