சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை: ரூ.86 ஆயிரம் பறிமுதல்
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, கணக்கில் வராத ரூ. 86 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, கணக்கில் வராத ரூ. 86 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜ் தலைமையில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, உணவுக் கூடையில் பதுக்கி வைத்திருந்த கணக்கில் வராத ரூ.85,500-யை கைப்பற்றினா்.
இதையடுத்து, சாா் பதிவாளா் ஆனந்தி, இவருக்கு உடந்தையாக இருந்த புரோக்கா் சௌந்தரபாண்டியன் ஆகியோரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.