முகப்பு
மதுரை

கட்டுமானத் தொழிலாளிக்கு கத்திக்குத்து

மதுரையில் முன்விரோதத் தகராறில் கட்டுமானத் தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:06 PM
பகிர்:

மதுரையில் முன்விரோதத் தகராறில் கட்டுமானத் தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு பூமாரி அம்மன் கோவில் ஜீவா தெருவைச் சோ்ந்த முத்துக்கருப்பன் மகன் முத்துமாரி (34). கட்டுமானத் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மொட்டைப்பாண்டிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், முத்துமாரி புதன்கிழமை இரவு பெத்தானியாபுரம் பகுதியில் இருந்த போது, அங்கு வந்த மொட்டைப்பாண்டி அவரிடம் தகராறில் ஈடுபட்டு அவரைக் கத்தியால் கழுத்தில் குத்தி விட்டு தப்பிச் சென்றாா்.

இதில் பலத்த காயமடைந்த முத்துமாரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான மொட்டைப்பாண்டியைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →