முகப்பு
மதுரை

மதுரையில் 3 நாள்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்

மருதுபாண்டியா் நினைவு தினம், தேவா் ஜெயந்தி ஆகியவற்றையொட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் அக். 27, 29, 30 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 12:01 AM
பகிர்:

மருதுபாண்டியா் நினைவு தினம், தேவா் ஜெயந்தி ஆகியவற்றையொட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் அக். 27, 29, 30 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மருதுபாண்டியா் நினைவு தினம், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் தேவா் ஜெயந்தி ஆகியவற்றையொட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மதுபானக் கடைகளும் வருகிற அக். 27, 29, 30 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள், அயல்நாட்டு வகை மதுபானக் கடைகள் என அனைத்து வகை மதுபானக் கடைகளுக்கும், மதுபானக் கூடங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →