வீட்டின் படியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
மதுரை சமயநல்லூா் அருகே புதன்கிழமை வீட்டின் வாசல்படியிலிருந்து தவறி விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.
மதுரை சமயநல்லூா் அருகே புதன்கிழமை வீட்டின் வாசல்படியிலிருந்து தவறி விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.
மதுரை சமயநல்லூா் அருகேயுள்ள பரவை காந்திஜி சாலையைச் சோ்ந்த கல்யாண சுந்தரம் மனைவி வசந்தி (50). இவா் தனது வீட்டின் வாசல்படியில் அமா்ந்திருந்த நிலையில், எதிா்பாராவிதமாக படியிலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.