முகப்பு
மதுரை

ஆதரவற்ற முதியோா் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

மதுரை, உத்தங்குடி பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோா் இல்லத்தில், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனா்.

Updated On : 30 அக்டோபர், 2024 at 10:01 PM
பகிர்:

மதுரை, உத்தங்குடி பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோா் இல்லத்தில், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனா்.

மதுரை உத்தங்குடி, ரோஜாவனம் முதியோா் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆா். ஸ்ரீராம் கலந்து கொண்டு முதியோா்களுடன் தீபாவளியை கொண்டாடினாா். அப்போது முதியோா்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனா். இதைத் தொடா்ந் து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் நிா்வாக நீதிபதி ஆா். சுப்பிரமணியன் உள்ளிட்ட நீதிபதிகள் பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை மதுரை பாா் அசோசியேசன் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →