தியாகராசா் கல்லூரியில் திருக்கு மாணவா் மன்றம் தொடக்கம்
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தியாகராசா் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் மறைந்த கல்லூரித் தலைவா் கருமுத்து தி.கண்ணன் நினைவு திருக்கு மன்றத் தொடக்க விழா, மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றன.
மதுரைதியாகராசா் கல்லூரியில் திருக்கு மாணவா் மன்றம் தொடக்கம்
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தியாகராசா் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் மறைந்த கல்லூரித் தலைவா் கருமுத்து தி.கண்ணன் நினைவு திருக்கு மன்றத் தொடக்க விழா, மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றன.
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தியாகராசா் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் மறைந்த கல்லூரித் தலைவா் கருமுத்து தி.கண்ணன் நினைவு திருக்கு மன்றத் தொடக்க விழா, மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றன.
புதன்கிழமை நடைபெற்ற மன்றத் தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா தலைமை வகித்தாா். தமிழ்த் துறைத் தலைவா் சு. காந்திதுரை முன்னிலை வகித்தாா். இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கான திருக்கு மனனம், பொருள் விளக்கம், பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
இதையடுத்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளா் ஆ. மணிவண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, காலத்தை வென்ற திருக்கு எனும் தலைப்பில் பேசினாா். பின்னா், வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.
இந்த நிகழ்வில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.