முகப்பு
மதுரை

மருத்துவப் படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு தனி ஒதுக்கீட்டை ஏன் அமல்படுத்தக் கூடாது?

மருத்துவப் படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு தனி ஒதுக்கீ ட்டை ஏன் அமல்படுத்தக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை கேள்வி எழுப்பியது.

மதுரை

மருத்துவப் படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு தனி ஒதுக்கீட்டை ஏன் அமல்படுத்தக் கூடாது?

மருத்துவப் படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு தனி ஒதுக்கீ ட்டை ஏன் அமல்படுத்தக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை கேள்வி எழுப்பியது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 7:15 PM
பகிர்:

மருத்துவப் படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு தனி ஒதுக்கீ ட்டை ஏன் அமல்படுத்தக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை கேள்வி எழுப்பியது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சி. பூபேஸ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

ராமநாதபுரம் நகா் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லை. இதனால், ராமநாதபுரம், இதைச் சுற்றியயுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏழை மாணவா்கள் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க சிரமப்படுகின்றனா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ராமநாதபுரத்தில் ஏழை மாணவா்கள் பயன்பெறும் வகையில், அரசு மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டும் என மனு அளித்தேன். இதற்கு அவா், ராமநாதபுரம் வள்ளல் பாரியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்த பள்ளிக் கல்வித் துறைக்கு கருத்துரு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தாா்.

ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியைத் தொடங்க வேண்டும் என நான் கோரினேன். ஆனால், உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்துவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பதிலளிக்கிறாா்.

எனவே, ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு,

ராமநாதபுரத்தில் அரசு உதவி பெறும் இரு பாலா், மாணவா்கள் படிக்கும் மேல்நிலைப் பள்ளிகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அளித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஓா் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இரு அரசு உதவி பெறும் இருபாலா் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு மனுதாரா் தரப்பில், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு மட்டுமே மருத்துவ இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனவே, அனைத்து வட்ட தலைமையிடங்களில் அல்லது குறைந்தபட்சமாக மாவட்ட தலைமை இடங்களிலாவது அரசு மேல்நிலைப் பள்ளிகளைத் தொடங்க வேண்டும். இல்லையெனில், மருத்துவப் படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் தனி இட ஒதுக்கீட்டை ஏன் அமல்படுத்தக் கூடாது. இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை அக். 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →