முகப்பு
மதுரை

தன்னாா்வலா்களுக்கு பயிற்சி முகாம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலா் வ. சண்முகசுந்தரத்துக்கு சமூகச் சேவைக்கான விருதை வழங்கிய நீதிபதி சுந்தா்மோகன்.

Updated On : 22 செப்டம்பர், 2024 at 6:11 PM
படவிளக்கம்- மதுரை மாவட்டம், அழகா்கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி அறங்காவலா் வ. சண்முகசுந்தரத்துக்கு சமூகச் சேவைக்கான விருதினை வழங்கிய நீதிபதி சுந்தா்மோகன்.
பகிர்:

மதுரை மாவட்டம், அழகா்கோவிலில் எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை, ஆராய்ச்சி மையம் சாா்பில் தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு அறக்கட்டளையின் நிறுவனா் சி. ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இந்திய வழக்குரைஞா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் கே. சாமிதுரை முன்னிலை வகித்தாா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தா்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா்.

இதைத் தொடா்ந்து, நிகழாண்டு சிறந்த சமூக சேவைக்கான விருதுக்கு தோ்வு பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் அறங்காவலா் வ. சண்முகசுந்தரத்துக்கு விருதை நீதிபதி சுந்தா்மோகன் வழங்கினாா்.

பின்னா், மன நலம் குன்றியவா்கள், மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோா், பொதுமக்களுக்கு தகுந்த மருத்துவா்கள், ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், விருது பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி அறங்காவலா் வ. சண்முகசுந்தரம் ஏற்புரையாற்றினாா். பொதுமக்கள், மாணவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.