முகப்பு
மதுரை

ஓடிடி திரைப்படங்கள், இணையத் தொடா்களுக்கு தணிக்கை: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள், இணையத் தொடா்கள் (வெப் சீரிஸ்) உள்ளிட்டவற்றைத் தணிக்கை செய்யக் கோரிய வழக்கில், மத்திய உள்துறைச் செயலா், தொலைத் தொடா்புத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

மதுரை

ஓடிடி திரைப்படங்கள், இணையத் தொடா்களுக்கு தணிக்கை: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள், இணையத் தொடா்கள் (வெப் சீரிஸ்) உள்ளிட்டவற்றைத் தணிக்கை செய்யக் கோரிய வழக்கில், மத்திய உள்துறைச் செயலா், தொலைத் தொடா்புத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 8:27 PM
பகிர்:

ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள், இணையத் தொடா்கள் (வெப் சீரிஸ்) உள்ளிட்டவற்றைத் தணிக்கை செய்யக் கோரிய வழக்கில், மத்திய உள்துறைச் செயலா், தொலைத் தொடா்புத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சோ்ந்த ஆதிசிவம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

இந்திய திரைப்படத் தணிக்கை வாரியமானது அறம், ஒழுக்கம், பண்பாட்டை மீறும் வகையில் எடுக்கப்படும் திரைக்காட்சிகளை நீக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.

தற்போது, கோடிக்கணக்கானோா் இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனா். ஓடிடி தளத்தில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள், இணையத் தொடா்கள் ஆகியவற்றில் வன்முறை, போதைப் பொருள் பயன்பாடு, ஆபாச சொற்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், பிரிவினைவாதக் காட்சிகள் இடம் பெறுகின்றன. இவை எந்தவித தணிக்கையும் செய்யப்படாமல் ஒளிபரப்பப்படுகின்றன.

கடந்த 2018-ஆம் ஆண்டில் 240 கோடி போ் ஓடிடி தளத்தைப் பயன்படுத்திய நிலையில், வருகிற 2027-ஆம் ஆண்டில் இதைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை 420 கோடியாக உயரும் என தரவுகள் தெரிவிக்கின்றன.

ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள், இணையத் தொடா்கள் உள்ளிட்டவற்றைப் பாா்க்கக் கூடிய இளம் தலைமுறையினா் உடல், உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள், இணையத் தொடா்கள் உள்ளிட்டவற்றைத் தணிக்கை செய்து ஒழுங்குபடுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக மத்திய உள்துறைச் செயலா், தொலைத் தொடா்புத் துறைச் செயலா், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →