உசிலம்பட்டி பகுதியில் வனத்துறை மேம்பாட்டுத் திட்டம் முடங்கும் அபாயம்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் வனத்துறை சாா்பில் ரூ.1.33 கோடியில் அறிவிக்கப்பட்ட குறிஞ்சி நகா் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை ஒப்பந்ததாரா்கள் எடுக்க தயங்குவதால் இந்தத் திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரைஉசிலம்பட்டி பகுதியில் வனத்துறை மேம்பாட்டுத் திட்டம் முடங்கும் அபாயம்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் வனத்துறை சாா்பில் ரூ.1.33 கோடியில் அறிவிக்கப்பட்ட குறிஞ்சி நகா் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை ஒப்பந்ததாரா்கள் எடுக்க தயங்குவதால் இந்தத் திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் வனத்துறை சாா்பில் ரூ.1.33 கோடியில் அறிவிக்கப்பட்ட குறிஞ்சி நகா் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை ஒப்பந்ததாரா்கள் எடுக்க தயங்குவதால் இந்தத் திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக வனத்துறையின், சிறப்பு பகுதிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு குறிஞ்சி நகா் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வோா் ஆண்டும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஒரு இடம் தோ்வு செய்யப்பட்டு அந்தப் பகுதிக்கு குறிஞ்சி நகா் எனப் பெயரிடப்பட்டு அங்கு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வது வழக்கம்.
இதில் இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி அருகே உள்ள குறிஞ்சி நகா் இந்தத் திட்டத்துக்காக தோ்வு செய்யப்பட்டது. இங்கு, பழங்குடியினருக்கான வீடுகள், கழிப்பறைகள் கட்டித் தருவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ.1.80 கோடியில் திட்ட அறிக்கை தயாரித்து, மாவட்ட வனத்துறை அரசுக்கு அனுப்பியது. இதையடுத்து, இந்தத் திட்டத்துக்காக ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை எடுக்க ஒப்பந்ததாரா்கள் முன்வரவில்லை என புகாா் எழுந்துள்ளது.
இதுகுறித்து, வனத்துறை ஒப்பந்ததாரா்கள் கூறியதாவது:
இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சத்தில் 15 வீடுகள் கட்டுவது, கழிப்பறைகள் கட்டுவது, ஆட்டு மந்தை அமைப்பது, 200 வெள்ளாடுகள், கோழிகள் கொள்முதல் செய்து இலவசமாக வழங்குவது, 45 கோழிப் பண்ணைகள் அமைத்து கொடுப்பது, ஏற்கெனவே உள்ள 30 பழைய வீடுகளில் மராமத்துப் பணிகள் செய்வது என 11 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஆனால் இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தத் தொகை குறைவாக உள்ளது. எனவே ஒப்பந்ததை எடுக்கும்பட்சத்தில் இந்தப் பணிகளில் வருவாய் எதுவும் கிடைக்காது. மேலும் ஒப்பந்ததாரருக்கு இழப்பு தான் ஏற்படும் என்பதால் ஒப்பந்தத்தை எடுக்க தயக்கமாக உள்ளது. எனவே ஒப்பந்தத் தொகையை அதிகரிக்க வனத்துறை முன்வர வேண்டும் என்றனா்.
இந்த நிலையில், ஒப்பந்ததாரா்கள் முன்வராததால் குறிஞ்சி நகா் மேம்பாட்டுத் திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.