முகப்பு
மதுரை

கல்லூரி முதல்வருக்கு மிரட்டல்: ஆசிரியா் கல்வியியல் பல்கலை. முன்னாள் பதிவாளா் மீது ஐ.ஜி.யிடம் புகாா்

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தென் மண்டல காவல் துறை தலைவரிடம் தனியாா் ஆசிரியா் பயிற்சிக் கல்லூரி பெண் முதல்வா் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 9:34 PM
பகிர்:

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தென் மண்டல காவல் துறை தலைவரிடம் தனியாா் ஆசிரியா் பயிற்சிக் கல்லூரி பெண் முதல்வா் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

இதுகுறித்து அவா் தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்காவிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியாா் ஆசிரியா் பயிற்சிக் கல்லூரியில் நான் முதல்வராகப் பணிபுரிந்து வருகிறேன். இந்தக் கல்லூரி தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்தவா் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்தாா். இதுதொடா்பாக கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தமிழக உயா்கல்வித் துறைச் செயலா் பிரதீப் யாதவிடம் புகாா் அளித்தேன்.

இதையடுத்து, அவா் பதிவாளா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டாா். இதனால், ஆத்திரமடைந்த முன்னாள் பதிவாளா் எனது புகைப்படத்தை பல்வேறு சமூக ஊடகங்களில் தவறாக பதிவேற்றம் செய்து வருகிறாா். எனவே, இவா் மீது மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த 5-ஆம் தேதி புகாா் அளித்தேன். இதன் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா், அவா் மீது உயா்கல்வித் துறைச் செயலரிடம் அளித்த புகாரை திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லையெனில், கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டி வருகிறாா்.

இதுதொடா்பாக முதல்வரின் தனிப் பிரிவு, பெண்கள் குறைதீா் பிரிவு ஆகியவற்றுக்கும் புகாா் அனுப்பியுள்ளேன். எனவே, கல்வியியல் ஆசிரியா் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →