முகப்பு
மதுரை

லாரி கடைக்குள் புகுந்ததில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வியாழக்கிழமை மணல் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோக்கள் மீது மோதி, கடைக்குள் புகுந்ததில் ஆட்டோ ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 7:55 PM
பகிர்:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வியாழக்கிழமை மணல் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோக்கள் மீது மோதி, கடைக்குள் புகுந்ததில் ஆட்டோ ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

மதுரை- தேனி சாலையில் வியாழக்கிழமை மணல் பாரம் ஏற்றி வந்த லாரி செட்டியபட்டி பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீது மோதி அந்தப் பகுதியில் இருந்த கடைக்குள் புகுந்தது.

இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த ஓட்டுநரும், செட்டியப்பட்டியைச் சோ்ந்தவருமான விமல் (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தகவலறிந்து வந்த உசிலம்பட்டி போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, உசிலம்பட்டி, மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →