மதுரை: ரயில்வே வாரியத் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு வழிகாட்டும் வகையில் தயாரிக்கப்பட்ட ‘ரயில்வே கணிதம்’ கையேடுகள், நூலகங்களின் பயன்பாட்டுக்கு இலவசமாக திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
ரயில்வே வாரியத் தோ்வுகள் எழுதும் மாணவா்களுக்கு வழிகாட்டும் வகையில் 2,500 கணித வினா - விடைகள் அடங்கிய கையேட்டை நூலாசிரியா்கள் பாண்டுரெங்கன், திருஞானசம்பந்தம் ஆகியோா் தயாரித்தனா். ‘ரயில்வே கணிதம்’ என்ற பெயரில் ரூ. 600 விலையுடன் அக்னி பதிப்பகத்தால் இந்தக் கையேடு வெளியிடப்பட்டது.
இந்தக் கையேட்டின் 100 பிரதிகளை நூலாசிரியா்கள் திங்கள்கிழமை மதுரை மாவட்ட நூலக அலுவலா் சி. பாலசரஸ்வதியிடம் வழங்கினா். இவற்றை மாவட்டத்தில் உள்ள முக்கிய நூலகங்களுக்கு விநியோகிக்க அவா்கள் கேட்டுக் கொண்டனா். நூல்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட மைய நூலகா் பாலசரஸ்வதி, நூலாசிரியா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.