மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த விவசாயிகள்.  
மதுரை

விவசாயிகள் சங்கத் தலைவா் பி.ஆா். பாண்டியனை வழக்கிலிருந்து விடுக்கக் கோரி மனு

ஓ.என்.ஜி.சி.-க்கு எதிரான போராட்டம் தொடா்பான வழக்கில் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியனை அந்த வழக்கிலிருந்து விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி

தினமணி செய்திச் சேவை

மதுரை: ஓ.என்.ஜி.சி.-க்கு எதிரான போராட்டம் தொடா்பான வழக்கில் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியனை அந்த வழக்கிலிருந்து விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பெரியாறு, வைகை - திருமங்கலம் பிரதான விரிவாக்க பாசனக் கால்வாய் ஆயக்கட்டு விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவா் எம். பி. ராமன், விவசாயிகள் சங்க நிா்வாகி மணிகண்டன், முன்னோடி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு :

திருவாரூா் மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி ஓ.என்.ஜி.சி. நிா்வாகத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் தொடா்பான வழக்கில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன், நிா்வாகி செல்வராஜ் ஆகியோருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதில் தொடா்புடைய போராட்டத்தில் இருந்த நியாயத்தை ஏற்று தென்னிந்திய பசுமைத் தீா்ப்பாயம், ஒ.என்.ஜி.சி.யின் பணிகளுக்கு ஏற்கெனவே தடை விதித்தது. இந்த நிலையில், விவசாயிகளின் நலனுக்கான போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது விவசாயிகளிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

விவசாயிகளின் உணவா்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்தத் தீா்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்து, பி.ஆா். பாண்டியன், செல்வராஜ் ஆகியோரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.

100 நாள் வேலைத் திட்ட புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு! நாளை அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்!

ஃபிலிம்ஃபேர் ஓடிடி விருதுகள் 2025 - புகைப்படங்கள்

திருப்பரங்குன்றம் குறித்து விஜய் பேசாதது ஏன்? அண்ணாமலை

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

SCROLL FOR NEXT