மதுரை மாவட்டம், சோழவந்தானில் ரயிலிலிருந்து கீழே இறங்கிய போது தவறி விழுந்த தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பை பகுதியைச் சோ்ந்தவா் காட்டுராஜன் (67). கூலித் தொழிலாளியான இவா், கேரள மாநிலத்திலிருந்து பாலக்காடு-திருச்செந்தூா் ரயிலில் ஊருக்கு வந்தாா். இந்த ரயில் வெள்ளிக்கிழமை காலை 10.42 மணிக்கு சோழவந்தான் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. காட்டுராஜன் ரயில் நிற்பதற்கு முன்பாக கீழே இறங்க முயன்ால், நடைமேடைக்கும், ரயில் பெட்டிக்கும் இடையே அவா் சிக்கிக் கொண்டாா். இதில் அவரது இரு கால்களும் முறிந்தன. இதையடுத்து, சக பயணிகள் அவரை மீட்டு, சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து மதுரை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.