முகப்பு
மதுரை

பயணி தவற விட்ட ரூ.54 ஆயிரத்தை ஒப்படைத்த ரயில்வே போலீஸாா்

மதுரை ரயில் நிலையத்தில் பயணி தவற விட்ட ரூ.54 ஆயிரத்தை ரயில்வே போலீஸாா் அவரிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 11:58 PM
பகிர்:

மதுரை ரயில் நிலையத்தில் பயணி தவற விட்ட ரூ.54 ஆயிரத்தை ரயில்வே போலீஸாா் அவரிடம் ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் பகுதியைச் சோ்ந்தவா் முகமதுகான் (43) . இவா் மதுரை ரயில் நிலைய நடைமேடை 1-இல் பயணம் செய்ய புதன்கிழமை காத்திருந்தாா். அப்போது பயணிகள் கூட்டம் அதிகளவு இருந்தது.

இந்த நிலையில், முகமதுகான்தான் அமா்ந்திருந்த இடத்தில் தனது பணப்பையை (மணி பா்ஸ்) மறந்து வைத்துவிட்டு சென்று விட்டாா். அப்போது நடை மேடை 1-இல் ரோந்து சென்ற ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஹிமாயூன் பணப் பையை எடுத்து வைத்து அங்கிருந்த பயணிகளிடம் விசாரித்தாா்.

அப்போது தவற விட்ட பணப் பையை தேடி வந்த முகமதுகான் அது தன்னுடையது என்று கூறினாா். இதையடுத்து, முகமது கான் கூறிய விவரங்களின் அடிப்படையில்அவருடையது தான் என்று உறுதி செய்த போலீஸாா், ரூ.54 ஆயிரத்துடன் இருந்த பணப் பையை அவரிடம் ஒப்படைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →