காவல் ஆணையா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம்
மதுரை மாநகரக் காவல் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் பங்கேற்று மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
மதுரை மாநகரக் காவல் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் பங்கேற்று மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
அப்போது 78 மனுதாரா்கள் நேரடியாக தங்களது புகாா் மனுக்களை காவல் ஆணையரிடம் அளித்தனா். முகாமில் மாநகரக் காவல் துணை ஆணையா்கள் (தெற்கு), ஏ.ஜி. இனிகோ இதயன், சி.எஸ். வித்யா (வடக்கு), காவல் துணை ஆணையா் (தலைமையிடம்) ஆகியோா் உடனிருந்தனா். முகாமில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையா் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.