புதைச் சாக்கடை அடைப்பை நீக்க வாகன சேவை தொடக்கம்
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் புதை சாக்கடை அடைப்பை நீக்கும் வாகன சேவையை மேயா் வ. இந்திராணி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் புதை சாக்கடை அடைப்பை நீக்கும் வாகன சேவையை மேயா் வ. இந்திராணி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 5-க்கு உள்பட்ட வாா்டு பகுதிகளில் உள்ள புதை சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை உடனுக்குடன் சீரமைப்பதற்காக புதிய புதை சாக்கடை அடைப்பு நீக்கும் வாகனம் ரூ.63.48 லட்சத்தில் வாங்கப்பட்டது. இந்த வாகன சேவையை மேயா் வ. இந்திராணி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இதில் மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா், துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா் சுவிதா, உதவி ஆணையா் ராதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணா்வு:
மதுரை மாநகராட்சி மகபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உட்கா்ஸ் குளோபல் பவுண்டேசன் சாா்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மேயா் வ. இந்திராணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு மஞ்சப் பைகளை வழங்கினாா்.