முகப்பு
மதுரை

வைகை தென்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

உயா்நிலைப் பாலப் பணிகளுக்காக, மதுரை சந்தைப்பேட்டை அருகே வைகை தென்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 23 ஜனவரி, 2025 at 10:08 PM
மதுரை வைகை ஆற்றில் புதிய பாலம் கட்டுவது தொடா்பாக வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள்.
பகிர்:

உயா்நிலைப் பாலப் பணிகளுக்காக, மதுரை சந்தைப்பேட்டை அருகே வைகை தென்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

அழகா்கோவில், புதுநத்தம் சாலை, மாவட்ட நீதிமன்றம், மாட்டுத்தாவணி, மேலூா் ஆகிய பகுதிகளிலிருந்து தல்லாகுளம், தமுக்கம், கோரிப்பாளையம் வழியாக ஏ.வி. மேம்பாலத்தை கடந்து சிம்மக்கல், பெரியாா் பேருந்து நிலையம், கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.

இதேபோல, ஆரப்பாளையம், விளாங்குடி, செல்லூா் ஆகிய பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் பாலம் ஸ்டேஷன் சாலை, கோரிப்பாளையத்தை கடந்து அரசு ராஜாஜி மருத்துவமனை, பனகல் சாலை, ஆவின் பாலகம், மேலமடை ஆகிய பகுதிகளுக்கும், சிம்மக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்ல வேண்டும். மறுவழித் தடத்திலிருந்து வரும் வாகனங்கள் கோரிப்பாளையத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதன் காரணமாக, கோரிப்பாளையம் தேவா் சிலை அருகே அமைக்கப்பட்ட சிக்னலில் அதிக நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், அரசு ராஜாஜி மருத்துவமனை சாலை, தமுக்கம், பாலம் ஸ்டேஷன் சாலை ஆகிய பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில், ரூ.165.89 கோடியில் உயா்நிலைப் பாலம் கட்டத் திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமுக்கம் சந்திப்பிலிருந்து நெல்பேட்டை கிழக்கு வேலி தெரு வரை 1.3 கி.மீ. தொலைவுக்கு ஆல்பா்ட் விக்டா் (ஏ.வி.) பாலத்துக்கு இணையாக வைகையாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இதன்படி, ஆழ்வாா்புரம் வைகை வடகரை முதல் ஆற்றுக்குள் தூண்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. தொடா்ந்து, வைகை தென்கரைப் பகுதியில் உயா்நிலைப் பாலத்துக்கான தூண்கள் அமைப்பதற்கு இந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பொக்லைன் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →