முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் துறை சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி, கப்பலூா் பாலத்திலிருந்தும், அருப்புக்கோட்டை சுற்றுச்சாலை சந்திப்பிலிருந்தும் மண்டேலா நகா், மேலூா் வழியாக திருச்சிக்குச் செல்ல எந்த கனரக சரக்கு வாகனங்களும் காலை 6 மணி முதல் அனுமதி இல்லை.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலிருந்து மேலூா் வழியாக திருச்சி, சென்னை நோக்கி செல்லக்கூடிய அனைத்து சரக்கு வாகனங்களும் திருமங்கலம்-கப்பலூா் சந்திப்பிலிருந்து சுற்றுச்சாலை வழியாக தேனி சாலை சந்திப்பு, சமயநல்லூா் சந்திப்பு, வாடிப்பட்டி சந்திப்பு வழியாக திண்டுக்கல், மணப்பாறை வழியாக திருச்சிக்குச் செல்ல வேண்டும்.
அருப்புக்கோட்டையிலிருந்து மண்டேலாநகா் வழியாக செல்லக்கூடிய அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் அருப்புக்கோட்டை சுற்றுச்சாலை சந்திப்பிலிருந்து கப்பலூா் பாலம் சென்று சுற்றுச்சாலை வழியாக தேனி சாலை சந்திப்பு, சமயநல்லூா் சந்திப்பு, வாடிப்பட்டி சந்திப்பு வழியாக திண்டுக்கல், மணப்பாறை வழியாக திருச்சிக்குச் செல்ல வேண்டும்.
திருச்சியிலிருந்து மேலூா் வழியாக மதுரை-அருப்புக்கோட்டை சுற்றுச்சாலை வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய கனரக சரக்கு வாகனங்கள் அனைத்தும் மேலூா் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து அலங்காநல்லூா் வழியாக தனிச்சியம் பிரிவு சந்திப்பு சென்று இடதுபுறம் திரும்பி சமயநல்லூா், துவரிமான், கப்பலூா் பாலம் வழியாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டும்.
மேலூா் நான்கு வழிச்சாலை விவசாயக் கல்லூரி சந்திப்பிலிருந்து ஒத்தக்கடை வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், மேலூா் நான்கு வழிச்சாலை - பாண்டி கோயில் சந்திப்பிலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வரை செல்வதற்கு எந்த ஒரு வாகனத்துக்கும் அனுமதியில்லை. இந்த வாகனங்கள் அனைத்தும் மேலூா் சாலை - விவசாயக் கல்லூரி சந்திப்பு - பி.சி.பெருங்காயம் சந்திப்பு - விரகனூா் வட்டச்சாலை - வைகை தென்கரை சாலை சந்திப்பு - குருவிக்காரன் சாலை பாலம் - ஆவின் சந்திப்பு - கே.கே.நகா். அலங்கார வளைவு வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து மேலூா் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், பாண்டி கோயில் சுற்றுச்சாலை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் - பூக்கள் சந்தை சந்திப்பு - மேலமடை சந்திப்பு - அண்ணாநகா் பிரதான சாலை- வண்டியூா் வைகை புதிய வடகரை சாலை வழியாக நான்கு வழிச்சாலை சந்திப்பை அடைந்து மேலூா், தென் மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டும். அழகா்கோவில் சாலையிலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அழகா்கோவில் சாலை-கடச்சனேந்தல் சந்திப்பு - ஊமச்சிகுளம் சாலை - நத்தம் மேம்பாலம் - தல்லாகுளம் உயா்நிலைப் பாலம் கீழ்ப் பகுதி- கே.கே.நகா் வட்டச்சாலை வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.