மதுரை அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், சிலைமான் அண்ணாநகரைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் சஞ்சீவ்ராஜ் (19). இவா் மதுரையில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாமண்டு படித்து வந்தாா். இவா் துக்ளாபட்டி பகுதியில் வைகை ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றாா்.
அப்போது அவா் நீரில் மூழ்கினாா். தகவலறிந்து வந்த அனுப்பானடி தீயணைப்பு வீரா்கள் நீரில் மூழ்கிய சஞ்சீவ்ராஜை பலமணி நேர தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்டனா்.
இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.