உயா்நீதிமன்ற மதுரை அமா்வு 
மதுரை

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு 6 வாரங்கள் அவகாசம்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கின் விசாரணையை நிறைவு செய்து, இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு 6 வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கின் விசாரணையை நிறைவு செய்து, இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு 6 வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் சட்டவிரோதக் காவலில் போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலையில் தொடா்புடைய காவல் துறை உயா் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்தக் கொலை விவகாரம் தொடா்பாக அஜித்குமாா் குடும்பத்தினரிடம் பேரம் பேசிய அரசியல் பிரமுகா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வழக்குரைஞா்கள் மாரீஸ் குமாா், காா்த்திக் ராஜா, மகாராஜன் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் முதல் தகவல் அறிக்கை, முதல் நிலை விசாரணை அறிக்கை நகல்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, சிபிஐ தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. எனவே, இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய 3 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வருகிற 6 வாரங்களுக்குள் சிபிஐ விசாரணையை நிறைவு செய்து, இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

ஆர்எஸ்எஸ் தனிநபர்களின் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது: மோகன் பாகவத்

சர்வதேச கிரிக்கெட்டில் 6000 ரன்களைக் கடந்த டேரில் மிட்செல்!

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம்: படப்பிடிப்பு தளத்தில் காவல் துறை குவிப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 09-11-2025

SCROLL FOR NEXT